ADDED : அக் 19, 2025 03:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்: சின்னசேலம் அடுத்த கூகையூர் கிராமத்தில் அ.தி.மு.க., சார்பில் திண்ணை பிரசாரம் மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல் தலைமை தாங்கினார்.
ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், ஐயம்பெருமாள், துணைச் செயலாளர் உமாஜெயவேல் முன்னிலை வகித்தனர். ஜெ., பேரவை கிழக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார்.
கூகையூர் ஊராட்சி முக்கிய வீதிகளில் அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
ஜெ., பேரவை இணைச் செயலாளர் பிரபு, துணை செயலாளர் கோவிந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.