ADDED : அக் 27, 2025 12:09 AM

உளுந்துார்பேட்டை: கிளியூரில் ஜெ., பேரவை சார்பில் அ.தி.மு.க., அரசின் சாதனை விளக்க திண்ணைப் பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
உளுந்துார்பேட்டை அடுத்த கிளியூர் பகுதியில் ஜெ., பேரவை சார்பில் அ.தி.மு.க., அரசின் சாதனை விளக்க திண்ணைப் பிரசாரம் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஜெ.,பேரவை செயலாளர் ஞானவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குமரகுரு, திண்ணை பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.
ஒன்றிய பேரவை செயலாளர் கணேசன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் சுப்புராயன், நகர செயலாளர் துரை, முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் சாய்ராம், மாவட்ட ஜெ.,பேரவை துணைத் தலைவர் ராஜா, கிளியூர் ஊராட்சி தலைவர் பாலு, ஒன்றிய அவைத் தலைவர் பாண்டியன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பேரவை துணைச் செயலாளர் செல்வபாண்டியன் நன்றி கூறினார்.

