/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
எய்ட்ஸ் பாதுகாப்பு உறுதிமொழியேற்பு
/
எய்ட்ஸ் பாதுகாப்பு உறுதிமொழியேற்பு
ADDED : டிச 11, 2024 06:14 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் அனைத்து அரசு அலுவலர்கள் எய்ட்ஸ் பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழியேற்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் நாள் உலக எய்ட்ஸ் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெஞ்சல் புயல் மழை காரணமாக உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சிகள் நடந்தது.
தொடர்ந்து கலெக்டர் பிரசாந்த் தலைமையில், 'எய்ட்ஸ் குறித்து முழுமையாக அறிந்திடுவேன். அறிந்ததை என் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் தெரிவித்திடுவேன். புதிய எய்ட்ஸ் தொற்று இல்லாத குடும்பம் மற்றும் சமூகத்தை உருவாக்க பாடுபடுவேன். எய்ட்ஸ் தொற்றுள்ளோரை அரவணைப்பேன். அவர்களுக்கு சம உரிமை அளிப்பேன்' என விழிப்புணர்வு உறுதிமொழியை அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.
எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்த மருத்துவர்கள், ரத்ததான முகாம்கள் நடத்திய கல்லுாரிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு கலெக்டர் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார். டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

