sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

உளுந்துார்பேட்டையில் விமான நிலையம்?: டிட்கோ ஆய்வு!

/

உளுந்துார்பேட்டையில் விமான நிலையம்?: டிட்கோ ஆய்வு!

உளுந்துார்பேட்டையில் விமான நிலையம்?: டிட்கோ ஆய்வு!

உளுந்துார்பேட்டையில் விமான நிலையம்?: டிட்கோ ஆய்வு!


ADDED : ஜன 04, 2025 06:36 AM

Google News

ADDED : ஜன 04, 2025 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்; உளுந்துார்பேட்டை அருகே விமானப்படை தளத்தால் கைவிடப்பட்டு சிதிலமடைந்த பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க டிட்கோ திட்ட அறிக்கையை தயார் செய்து வருகிறது.

நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டியது அவசியம். இதன் காரணமாக உதான் திட்டத்தின் கீழ் புதிய விமான நிலையங்களை உருவாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழக அரசும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இதற்காக தமிழக தொழில் வளர்ச்சி கழகமான 'டிட்கோ' புதிய விமான நிலையங்களை அமைப்பதற்கான சாத்திய கூறுகளையும் அதற்கான திட்ட வரைவுகளையும் தமிழகம் முழுவதும் முன்னெடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக உளுந்துார்பேட்டை, 'நகர்' பகுதியில் இரண்டாம் உலகப்போரின் போது ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்ட விமானப்படை தளம் கைவிடப்பட்ட நிலையில், விமான ஓடுதளம் அமைந்திருக்கும் பகுதியில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை டிட்கோ மேற்கொண்டுள்ளது. இது 35 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

விமான நிலையத்திற்கு 80 ஏக்கர் தேவைப்படும் என்பதால் தனிநபர்களிடமிருந்து 48 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி, மொத்தம் 83 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை தமிழகத் தொழில் வளர்ச்சி கழகம் மேற்கொண்டுள்ளது.

சமீபத்தில் வருவாய்த்துறை சார்பில், திருக்கோவிலூர் சப் கலெக்டர் ஆய்வை தொடர்ந்து டிட்கோ திட்ட அறிக்கையை தயாரித்துள்ளது. இந்திய விமான நிலையங்களின் ஆணையம் (ஏ.ஏ.ஐ) அனுமதி கிடைத்துவிட்டால் விமான நிலையம் அமைவது உறுதியாகும்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதி என்பதால் பயணிகள் எளிதாக விமான நிலையத்தை சென்றடைய முடியும் அத்துடன் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், நெய்வேலி, விருத்தாசலம், திருக்கோவிலுார், திருவண்ணாமலை உள்ளிட்ட நகரங்களுக்கு மையப்பகுதியாகவும் உள்ளது.

இதன் அருகில் தான் ஆசனுார் தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இதனால் தொழில் வளத்தில் பின் தங்கிய விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் வளர்ச்சி பெறும்.

இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தொழில்துறையினரும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விமான நிலையம் உருவானால் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன திறப்பு விழாவின் போது, பிரதமர் ஜவஹர்லால் நேரு பயணித்த விமானம் இந்த விமான பாதையை பயன்படுத்தியது. அதே பாதையில் பல விமானங்கள் பயணிக்கும் பெருமை கிட்டும்.






      Dinamalar
      Follow us