/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கோவில் இடம் ஆக்கிரமிப்புகளை அகற்ற அகில பாரத இந்து மகா சபா கோரிக்கை
/
கோவில் இடம் ஆக்கிரமிப்புகளை அகற்ற அகில பாரத இந்து மகா சபா கோரிக்கை
கோவில் இடம் ஆக்கிரமிப்புகளை அகற்ற அகில பாரத இந்து மகா சபா கோரிக்கை
கோவில் இடம் ஆக்கிரமிப்புகளை அகற்ற அகில பாரத இந்து மகா சபா கோரிக்கை
ADDED : ஜூலை 17, 2025 06:34 AM

உளுந்துார்பேட்டை : அகில பாரத இந்து மகா சபா மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உளுந்துார்பேட்டையில் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட பொது செயலாளர் சீராளசிவக்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் பெரிசெந்தில் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் உளுந்துார்பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில் இட ஆக்கிரமிப்புகளை அகற்றி இடத்தை பாதுகாக்க வேண்டும். சாலையோரம் உள்ள மாட்டு இறைச்சி கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் சிவக்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் சபரிராஜன், வடக்கு மண்டல தலைவர் அருள், மாவட்ட அமைப்பு செயலாளர் ஜோதிலிங்கம், மாவட்ட செய்தி தொடர்பாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் சிவ தேவன், கடலுார் மாவட்டத் தலைவர் தமிழ் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.