/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏ.கே.டி., சி.பி.எஸ்.இ., பள்ளி மாவட்ட அளவில் அபார சாதனை
/
ஏ.கே.டி., சி.பி.எஸ்.இ., பள்ளி மாவட்ட அளவில் அபார சாதனை
ஏ.கே.டி., சி.பி.எஸ்.இ., பள்ளி மாவட்ட அளவில் அபார சாதனை
ஏ.கே.டி., சி.பி.எஸ்.இ., பள்ளி மாவட்ட அளவில் அபார சாதனை
ADDED : மே 15, 2025 02:46 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., சி.பி.எஸ்.இ., பள்ளியில், 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில், மாவட்ட அளவில் சாதனை படைத்த மாணவர்கள், பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., நினைவு வித்யா சாகேத் சி.பி.எஸ்.இ., பள்ளி 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஆண்டுதோறும் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. தற்போது வெளியான பிளஸ் 2 தேர்வில் மாணவர் சித்தார்த் 500க்கு 486 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் ஜே.இ.இ., தேர்விலும் 98.68 சதவீத மதிப்பெண் பெற்று, தேசிய அளவிலும் சிறப்பிடம் பெற்றுள்ளார்.
மாணவி லினிஷா 483, மாணவர் தினேஷ் 477, மாணவி ஸ்ருதி 473, மாணவர்கள் அறிவொளி 471, யுவராஜ் 470 மதிப்பெண் பெற்றுள்ளனர். 5 மாணவர்கள் வெவ்வெறு பாடங்களில் 'சென்டம்' பெற்றுள்ளனர். மேலும் 480க்கு மேல் 2 பேர், 470க்கு மேல் 5 பேர், 460க்கு மேல் 10 பேர், 450க்கு மேல் 18 பேர், 400க்கு மேல் 72 பேர் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
10ம் வகுப்பு தேர்வில் மாணவிகள் ஸ்ரீதேவி, 487, பிரகலயா 484, வான்ஸ்ரீ 484, மாணவர் ஹரிதர்ஷன் 483, ஓவியா 482, ஷர்மிளா 480 மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 100 சதவீதம் ஆகும். 20 மாணவர்கள் தமிழ் பாடத்தில், 'சென்டம்' பெற்றுள்ளனர். இது தவிர 480க்கு மேல் 6 பேர், 470க்கு மேல் 17 பேர், 460க்கு மேல் 29 பேர், 450க்கு மேல் 40 பேர், 400க்கு மேல் 89 பேர் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தேர்வில் சாதித்து, பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவியருக்கு நடந்த பாராட்டு விழாவிற்கு தாளாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் லட்சுமிபிரியா, நிர்வாக இயக்குநர் ராஜேந்திரன், நிர்வாக இணை இயக்குநர் டாக்டர் அபிநயா ராஜேந்திரன் ஆகியோர் மாணவர்களை பாராட்டி கவுரவித்தனர்.