ADDED : பிப் 26, 2024 06:22 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ஏ.கே.டி., நினைவு பொறியியல் கல்லுாரியில், வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
முகாமிற்கு தாளாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், கல்லுாரி சி.இ.ஓ., அபிநயா ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் தணிகைவேலன் வரவேற்றார்.
முகாமில் ஸ்ரீசாய்பவர் அண்ட் எக்யூப்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினர் மாணவர்களிடம் நேர்காணல் நடத்தினர்.
இதில் எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்கல்ஸ் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். பங்கேற்ற பெரும்பான்மையான மாணவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
தொடர்ந்து நேர்காணலில் தேர்வான மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கல்லுாரி வேலை வாய்ப்பு அலுவலர் சரவணன் உட்பட துறை தலைவர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
கல்லுாரி துணை முதல்வர் மணிக்கண்ணன் நன்றி கூறினார்.
