/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏ.கே.டி., பள்ளியில் ஆரோக்கிய வாழ்வு பயிற்சி பட்டறை
/
ஏ.கே.டி., பள்ளியில் ஆரோக்கிய வாழ்வு பயிற்சி பட்டறை
ஏ.கே.டி., பள்ளியில் ஆரோக்கிய வாழ்வு பயிற்சி பட்டறை
ஏ.கே.டி., பள்ளியில் ஆரோக்கிய வாழ்வு பயிற்சி பட்டறை
ADDED : ஜன 05, 2024 06:22 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.,மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆரோக்கிய வாழ்வு பயிற்சி பட்டறை நடந்தது.
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை சார்பில் ஆரோக்கியமான வாழ்வியல் பயிற்சி பட்டறை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. விழுப்பும் கோட்ட மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை துவக்கினார். கள்ளக்குறிச்சி சி.இ.ஓ., முருகன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வக்குமார், டி.இ.ஓ., ஆரோக்கியசாமி, தகவல் அலுவலர் இந்திராதேவி, ஏ.கே.டி., பள்ளி முதல்வர் வெங்கட்ரமணன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் முன்னதாக பசுமை உறுதிமொழி ஏற்று, அனைவருக்கும் துணிப்பை வழங்கப்பட்டது.
புதுச்சேரி யுனிவர்செல் ஈக்கோ பவுண்டேஷன் நிறுவனர் பூபேஷ்குப்தா இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாத்தலின் அவசியம் குறித்து பேசினார். கள்ளக்குறிச்சி வனச்சரக அலுவலர் சந்தோஷ் மரக்கன்றுகளை நட்டு, அதனை பராமரிப்பது குறித்து விளக்கினார். பயிற்சியாளர் அன்பழகன் மண்புழு உரம் தயாரித்தல் மற்றும் இயற்கை வேளாண்மை குறித்து அறிவுறுத்தினார். கள்ளக்குறிச்சி தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சரவணன் நன்றி கூறினார்.