/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏ.கே.டி., மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா
/
ஏ.கே.டி., மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா
ADDED : மார் 25, 2025 09:39 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
விழாவிற்கு, பள்ளி தாளாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் லட்சுமிபிரியா, நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், நிர்வாக இணை இயக்குனர் டாக்டர் அபிநயா ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதுகலை தமிழாசிரியர் சதிஷ் வரவேற்றார். விழாவில் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
விழாவில், கடந்தாண்டு 10, 12ம் வகுப்பு, ஐஐடி மற்றும் திறனறி தேர்வு மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் பள்ளியில் பல ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. பின்னர் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.
விழாவில், தி.மு.க., மாவட்ட அவைத் தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் முருகன், ஒன்றிய சேர்மன்கள் சத்தியமூர்த்தி, தாமோதிரன் மற்றும் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், ஆசிரியர் கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
பள்ளி முதல்வர் வெங்கட் ரமணன் நன்றி கூறினார்.