நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலையில் 50 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர்.
கல்வராயன்மலை, கரியாலுார் சப் இன்ஸ்பெக்டர் ராமர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் காலை முண்டியூர் காட்டுகொட்டாய் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அங்கு, கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்கு வைத்திருந்த 50 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.
தலைமறைவான சாராய வியாபாரி பாண்டியன், 45; மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.