ADDED : ஜன 17, 2025 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு: புதுப்பேட்டையில் மது பாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பேட்டை பகுதியில் வட பொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது அப்பகுதியில் மாணிக்கம் மனைவி லட்சுமி 55, என்பவர் வீட்டின் பின்புறம் மது பாட்டில்களை வைத்து விற்று வந்துள்ளார். லட்சுமியை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சங்கராபுரம்
சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் ரோந்து சென்றார்.அப்போது அங்கு கள்ளத்தனமாக பிராந்தி பாட்டில் விற்ற அதே ஊரை சேர்ந்த ரமேஷ், 40; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 6 பிராந்திபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.