ADDED : மே 02, 2025 07:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மது பாட்டில் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையத்தில் சப் இன்ஸ்பெக்டர் தனசேகர் டாஸ்மாக் கடை அருகே சோதனை மேற்கொண்டார். அப்போது அப்பகுதியில் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்ற மேலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மொட்டையன் மகன் சக்கரபாணி, 39; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 12 குவாட்டர் சைஸ் மதுபாட்டில்கள், 200 ரூநாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.