ADDED : செப் 01, 2025 11:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மதுபானம் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த எஸ்.கொளத்துார் கிராமத்தில் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பதாக கிடைத்த தகவலின்பேரில் சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் தலைமையிலான போலீசார், எஸ்.கொளத்துார் கிராமத்தில் நேற்று ரோந்துசென்றனர். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த முனியன் மகன் சுரேந்திரன், 30; அவருக்கு சொந்தமான காட்டுக்கொட்டகையில் மதுபாட்டில் விற்பது தெரியவந்தது. போலீசார் சுரேந்திரனை கைது செய்து, அவரிடமிருந்து 7 குவார்ட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.