ADDED : மார் 06, 2026 06:08 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விற்பனை செய்வதற்காக மதுபாட்டில் வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி பழைய பஸ்நிலையம் பகுதியில் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
அதன்பேரில், கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகர் மற்றும் போலீசார் நேற்று காலை 9 மணியளவில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, பழைய பஸ் நிலையத்தில் உள்ள முடிதிருத்தும் கடை அருகே சந்தேகிக்கும்படி ஸ்கூட்டருடன் இருந்தவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், கள்ளக்குறிச்சி பழைய மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொன்னுசாமி மகன் ராஜி,46; என்பதும், ஸ்கூட்டரில் மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்வதும் தெரிந்தது. இதையடுத்து, ராஜியை கைது செய்து அவரிடமிருந்த 5 மதுபாட்டில்கள், ரூ.200 மற்றும் ஸ்கூட்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
