/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுார் தொகுதிக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த அனைத்து கட்சி கூட்டம்

ADDED : அக் 31, 2025 02:39 AM

திருக்கோவிலுார்:  திருக்கோவிலுார் தொகுதிக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான  அனைத்து க ட்சி கூட்டம் சப் கலெக்டர்  தலைமையில் நடந்தது.
இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2026 அன்று தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த உத்தரவு குறித்த திருக்கோவிலுார்  சட்டசபை தொகுதி அனைத்து கட்சி கூட்டம் திருக்கோவிலுார் சட்டசபை வாக்காளர் பதிவு அலுவலரும், சப் கலெக்டர் ஆனந்த் குமார் சிங் தலைமையில் சப் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
திருக்கோவிலுார்  தாசில்தார் சரவணன், கண்டாச்சிபுரம் தாசில்தார் முத்து, திருவெண்ணைநல்லுார்  தாசில்தார் ரகுராமன் முன்னிலை வகித்தனர். இதில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.  வி.சி.க., வினர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்திலிருந்து வெளியேறினார். நாம் தமிழர் கட்சியினர் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதற்கு பதில் அளித்த சப் கலெக்டர்  தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் தான் செயல்பட முடியும் என்பதால் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் தேர்தல் துணை தாசில்தார், தேர்தல் பிரிவு அலுவலர்கள், சார் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.