/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அனைத்து மருந்தாளுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
அனைத்து மருந்தாளுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 25, 2025 10:35 PM

கள்ளக்குறிச்சி; தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதார அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் மணிமாறன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் அன்புதுரை முன்னிலை வகித்தார். துணை தலைவர் ஷபி வரவேற்றார். மாவட்ட செயலாளர் மலர்கொடி கோரிக்கை வலியுறுத்தி பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரவி, அன்பு, ரமேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், காலியாக உள்ள மருந்தாளுர் பணியிடங்களை காலமுறை ஊதியத்துடன் நிரப்ப வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருந்துகளை உரிய வெப்ப நிலையில் பராமரித்திட குளிர்பதன வசதியுடன் கூடிய மருந்து கிடங்கு மற்றும் மருந்தகங்கள் அமைத்திட வேண்டும்.
வட்டார மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தக கண்காணிப்பாளர் பணியிடங்களை உருவாக்கிட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட பொருளாளர் ரவிராஜா நன்றி கூறினார்.