/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி 'ரிங் ரோடு' திட்டத்திற்கு ஒதுக்கீடு... ரூ.73 கோடி; நில எடுப்பு உள்ளிட்ட ஆயத்த பணிகள் துவக்கம்
/
கள்ளக்குறிச்சி 'ரிங் ரோடு' திட்டத்திற்கு ஒதுக்கீடு... ரூ.73 கோடி; நில எடுப்பு உள்ளிட்ட ஆயத்த பணிகள் துவக்கம்
கள்ளக்குறிச்சி 'ரிங் ரோடு' திட்டத்திற்கு ஒதுக்கீடு... ரூ.73 கோடி; நில எடுப்பு உள்ளிட்ட ஆயத்த பணிகள் துவக்கம்
கள்ளக்குறிச்சி 'ரிங் ரோடு' திட்டத்திற்கு ஒதுக்கீடு... ரூ.73 கோடி; நில எடுப்பு உள்ளிட்ட ஆயத்த பணிகள் துவக்கம்
ADDED : ஜூலை 29, 2025 11:55 PM

கள்ளக்குறிச்சி பல ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி வாகனங்கள் நகரை கடந்து செல்லும்போது, நகரம் ஸ்தம்பித்து விடுகிறது. கடந்த 2019ம் ஆண்டு முதல் கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் இயங்கி வருகிறது.
சிறுவங்கூரில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. பல்வேறு மாவட்ட அரசு அலுவலகங்களும், கள்ளக்குறிச்சியில் செயல்படுவதால், அலுவலகங்களுக்கு மக்களின் வருகையும் அதிகரித்துள்ளது. அதனால், நாளுக்கு நாள் போக்குவரத்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.
அரவை பருவங்களில் டிராக்டர், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் நகரை கடந்து கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்புகள் ஏற்றிச் செல்கின்றன. தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் போக்குவரத்து பாதிப்பு உச்சக்கட்டத்திற்கு செல்கிறது.
விபத்து உள்ளிட்டவற்றில் சிக்கி அவசர சிகிச்சை தேவைப்படுவோர்களை ஏற்றி செல்லும் ஆம்புலன்ஸ்கள், மாவட்ட அரசு உயர் அதிகாரிகளின் வாகனங்களும் அவ்வப்போது வாகன நெரிசலில் சிக்கி தவிப்பதை காணமுடிகிறது. தொடரும் டிராபிக் பிரச்னையால், சிறுவங்கூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு செல்வதற்கு பொதுமக்கள், நோயாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
மாவட்டத்தின் தலைநகரமான கள்ளக்குறிச்சியில், வாகன பெருக்கத்திற்கேற்ப விசாலமான சாலை வசதிகள் இல்லை. போக்குவரத்திற்கு நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், கள்ளக்குறிச்சி சுற்றி செல்லும் 'ரிங் ரோடு' அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
ரிங் ரோடு திட்டம் தியாகதுருகம் சாலையில் வீரசோழபுரம் பகுதியில் துவங்கி பெருவங்கூர், தண்டலை, சிறுவங்கூர் அரசு மருத்துவ கல்லுாரி சங்கராபுரம் சாலை ரோடுமாமந்துார் பகுதியில் இணைக்கப்படுகிறது. அதேபோல் ரோடு மாமாந்துாரில் இருந்து மோ.வன்னஞ்சூர், சடையம்பட்டு கிராம எல்லையில் உள்ள அரசு கலை கல்லுாரி வழியாக கச்சிராயபாளையம் சாலையில் காரனுார் பகுதியில் இணைக்க திட்டமிட்டுள்ளது.
தொடர்ந்து காரனுார், குடிகாடு, வானவில் நகர் வழியாக சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இணைக்கப்பட உள்ளது. அவ்வாறு சாலைகளை இணைக்கும் பட்சத்தில் கள்ளக்குறிச்சி நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படுவதற்கான வழிவகை உள்ளது.
இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி கூறுகையில்;
கள்ளக்குறிச்சி நகரை சுற்றிலும் 14 கி.மீ., துாரம் 'ரிங் ரோடு' அமைவிடத்தில் நில எடுப்புக்கு,ரூ.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது நெடுஞ்சாலை துறை மூலம் சாலை அமைவிடம் தொடர்பாகவும், வழியில் உள்ள தனியார் மற்றும் அரசு நிலங்கள் குறித்த கணக்கெடுப்பு உள்ளிட்ட ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நில எடுப்புக்கு பின் சாலை அமைப்பதற்கான அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.