/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வண்டல் மண் கடத்தல்: லாரி, ஜே.சி.பி. பறிமுதல்
/
வண்டல் மண் கடத்தல்: லாரி, ஜே.சி.பி. பறிமுதல்
ADDED : அக் 27, 2025 12:09 AM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே ஏரியில் வண்டல் மண் கடத்திய டிப்பர் லாரி மற்றும் ஜே.சி.பி., யை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருக்கோவிலுார் அடுத்த கீழத்தாழனுார் ஏரியில் அரசு அனுமதி இன்றி வண்டல் மண் எடுப்பதாக வி.ஏ.ஓ., வெங்கடாஜலபதி கொடுத்த புகாரின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
அரசு அனுமதியின்றி வண்டல் மண் எடுத்த ஜே.சி.பி., மற்றும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, அத்தண்டமருதுார் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் மகன் வெங்கடாஜலம், 32; கீழத்தாழனுாரைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் ஆனந்தன், 32; ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

