/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
படிப்போடு அறிவையும் வளர்த்து கொள்ள வேண்டும்: மாணவர்களுக்கு சி.இ.ஓ., கார்த்திகா 'அட்வைஸ்'

ADDED : நவ 06, 2025 05:45 AM

கள்ளக்குறிச்சி: 'தினமலர்' நாளிதழ் சமூக பொறுப்புடன் செயல்பட்டு வருவதாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா பேசினார்.
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் 'தினமலர்' மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில் நடந்த வினாடி - வினா போட்டியில் அவர் பேசியதாவது:
கற்றல் என்பது தாயின் கருவறையில் இருக்கும்போதே ஆரம்பமாகிவிடுகிறது. பள்ளி கல்வியை தேர்வுக்காக மட்டும் படிக்காமல், நன்கு புரிந்து வாழ்க்கைக்கான கல்வியாக படிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் நம்மை நாம் ஜெயித்து கொண்டே இருக்க வேண்டும். படிப்போடு அறிவையும் வளர்த்து கொள்ள வேண்டும். வெறும் படிப்போடு மட்டுமின்றி பொது நிகழ்வுகள், நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ளவேண்டும். வாய்ப்புகளை பயன்படுத்தி, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முயற்சி எடுக்க வேண்டும்.
பள்ளி படிப்போடு அறிவையும் வளர்த்து கொள்வதற்காக 'பட்டம்' என்ற இதழை வழங்கி, சமூக பொறுப்புடன் 'தினமலர்' நாளிதழ் செயல்பட்டு வருகிறது. மேலும், சிறுவர் மலர், ஆன்மிக மலர் ஆகியவற்றை வெளியிடுவதுடன், பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளை நடத்தி சமூக சேவையாற்றி வருகிறது. இதற்காக 'தினமலர்' நாளிதழுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவர்களாகிய நீங்கள் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்காக நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
இவ்வாறு சி.இ.ஓ., கார்த்திகா பேசினார்.