/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாற்றுக் கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்
/
மாற்றுக் கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : நவ 06, 2024 10:29 PM

திருக்கோவிலுார்; திருக்கோவிலுாரில் பா.ம.க., உள்ளிட்ட மாற்று கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் முன்னிலையில் தி.மு.க., வில் இணைந்தனர்.
திருக்கோவிலுார் ஒன்றிய தி.மு.க., அலுவலகத்தில், மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் தி.மு.க., வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் முன்னிலையில், பா.ம.க., ஒன்றிய மாணவர் அணி தலைவர் சரவணன் தலைமையில் சிலரும், வி.சி.க., உள்ளிட்ட மாற்று கட்சிகளை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் தி.மு.க., வில் இணைந்தனர். இவர்களை எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் சால்வை அணிவித்து வரவேற்றார்.
ஒன்றிய செயலாளர் அய்யனார் ஏற்பாட்டில் நடந்த இந்நிகழ்ச்சியில், மாவட்ட பிரதிநிதி சுந்தரம், ஒன்றிய துணை செயலாளர் கணேசன், அவைத்தலைவர் தமிழரசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் விஜயராமன், மாவட்ட பிரதிநிதி மாணிக்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.