/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கூகையூர் அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
/
கூகையூர் அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
கூகையூர் அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
கூகையூர் அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : ஜூன் 07, 2024 06:28 AM
கள்ளக்குறிச்சி : கூகையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த கூகையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1990-2023ம் கல்வி ஆண்டு வரை 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
தலைமையாசிரியர் இளமுருகு தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவ மாணவியர் பலர் பங்கேற்று, தங்களது பள்ளி பருவத்தின் கடந்தகால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தாங்கள் பயின்ற வகுப்பறையில் அமர்ந்து மகிழ்ந்தனர்.தொடர்ந்து பள்ளியில் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு முன்னாள் மாணவர்கள் பலர் தங்களால் முடிந்த உதவிகள் மற்றும் பணிகளை செய்வது என்றும், ஆண்டுதோறும் முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்துவது என்றும் தீர்மானித்தனர்.நிகழ்ச்சியை முன்னாள் மாணவர்கள் சேகர், செந்தில், சங்கர், மணி, அன்புரோஸ், மாரிமுத்து, பிரபாகரன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர். விழாவில், 500க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.