/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : பிப் 01, 2024 06:23 AM

கள்ளக்குறிச்சி; ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டத்தில், திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பங்கேற்று புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினார்.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டத்திற்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் மகுடமுடி தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை உரையாற்றினார்.
முன்னாள் துறைத்தலைவர் மகாலட்சுமி முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவி ரம்யா முருதாஸ் வரவேற்றார். துணை முதல்வர் ஜான்விக்டர் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக திரைப்பட இயக்குநர் முருகதாஸ் பங்கேற்று சிறப்புரையாற்றி, போட்டி தேர்வுகளுக்கு பயிலும் கல்லுாரி மாணவ, மாணவிகளின் நலனுக்காக புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினார்.
மேலும், ஆலத்துார் கருணை இல்லத்தில் உள்ள 90 பேருக்கு காலை மற்றும் மதிய உணவுகளும், கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்று பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் அசோக், சையத்காலித் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். அப்துல்ரஷித் நன்றி கூறினார்.