தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


ADDED : ஜன 21, 2026 06:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 21, 2026 06:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 30 வருடங்களுக்கு முன் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். கடந்த 1996 - 1997ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் 30 ஆண்டுகளுக்கு பின் பள்ளியில் சந்தித்தனர். மேலும், பள்ளியில் படித்தபோது ஆசிரியராக பணிபுரிந்த கணபதி, சண்முகம், ரேவதி, மணியம்மை, ஷேக்அலி, விஜயகுமார், ராஜா, ஞானசேகரன், மணிக்கண்ணன், சவுந்தர்ராஜன் ஆகியோருக்கு முன்னிலை வகித்தனர்.

முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்களிடம் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டனர். தொடர்ந்து, தங்களது வகுப்பறைக்கு சென்று அமர்ந்து பழைய நினைவுகளையும், தற்போதைய வேலை, குடும்பம் குறித்த தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு 5 மின் விசிறிகள் வழங்கி, குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us