/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பத்ரகாளியம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம்
/
பத்ரகாளியம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம்
ADDED : டிச 01, 2024 06:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் கார்த்திகை மாத அமாவாசை நிகும்பலா யாகம் நடந்தது.
அதனையொட்டி, நேற்று இரவு பத்ரகாளியம்மன், பெரியநாயகி அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து காளியம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. 100க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் காளி மந்திரங்கள் வாசித்து குங்குமார்ச்சனை செய்தனர்.
நாகாத்தம்மன், சக்தி அம்மன், காட்டேரி அம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. தொடர்ந்து ஒரு மணி நேரம் நடந்த நிகும்பலா யாகத்தில் மிளகாய் நெடி சிறிதும் இன்றி பக்தர்கள் தோஷ நிவர்த்தி செய்து பத்ரகாளியம்மனை வழிபட்டனர்.