/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வாராஹி அம்மனுக்கு அமாவாசை யாகம்
/
வாராஹி அம்மனுக்கு அமாவாசை யாகம்
ADDED : ஏப் 28, 2025 05:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம் : சின்னசேலம் அருகே வாராஹி அம்மனுக்கு நடந்த சித்திரை சிறப்பு வழிபாட்டில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சின்னசேலம், காமாட்சியம்மன் சமேத கங்காதீஸ்வரர் கோவிலில், வாராஹி அம்மனுக்கு, சித்திரை அமாவாசை சிறப்பு யாகம் நடந்தது. இதையொட்டி, சுவாமிக்கு வெற்றிலை யாகமும், 108 லிட்டர், பால் அபிஷேகமும் நடத்தப்பட்டது.
இதில், வெற்றிலையில் கோரிக்கைகளை எழுதி யாகத்தில் பக்தர்கள் சேர்த்து வழிபட்டனர். வேள்வி பூஜைகளை கவுதம் குருக்கள் மற்றும் மோகன் குழுவினர் செய்தனர். தொடர்ந்து, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

