/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணி
/
ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணி
ADDED : நவ 29, 2024 07:00 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் காலி பணியிடத்திற்கு முதற்கட்ட நேர்முக தேர்வு வரும் நாளை(30ம் தேதி) நடக்கிறது.
இது குறித்து கள்ளக்குறிச்சி 108 ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளர் குமரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி காந்தி சாலையில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், 108 ஆம்புலன்ஸில் அவசர மருத்துவ உதவியாளர் காலி பணியிடத்திற்கு நாளை(30ம் தேதி) காலை 10 முதல் பகல் 1 மணி வரை முதற்கட்ட நேர்முகத் தேர்வு நடக்கிறது.
இப்பணிக்கு 19 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். பி.எஸ்.சி., நர்சிங், ஜி.என்.எம்., --டி.எம்.எல்.டி., ஏ.என்.எம்., (பிளஸ் 2விற்கு பின் இரண்டு ஆண்டுகள் படிப்பு) அல்லது லைப் சயின்ஸ் படிப்புகளான பி.எஸ்.சி., உயிரியல், தாவரவியல், பயோ கெமிஸ்ட்ரி, பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி ஆகியவற்றில் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
முதலில் எழுத்து தேர்வு, மருத்துவம் சார்ந்த அடிப்படை முதல் உதவி, செவிலியர் தொடர்பான அடிப்படை அறிவு பரிசோதிக்கப்படும். இறுதியாக மனிதவள துறையின் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். மாத ஊதியம் 16,990 வழங்கப்படும். நேர்முக தேர்வுக்கு வருவோர் தங்களது அசல் மற்றும் நகல் கல்வித் தகுதி சான்று, ஓட்டுநர் உரிமம், முகவரி மற்றும் அடையாள சான்றுகளை எடுத்து வரவேண்டும்.
தேர்வு செய்யப்படும் நபர்கள் 12 மணி நேர ஷிப்ட் அடிப்படையில் தமிழ்நாடு முழுதும் பணியமர்த்தப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.