/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரங்கப்பனுார் ஊராட்சியில் மனை பட்டா வழங்கி சாதனை
/
ரங்கப்பனுார் ஊராட்சியில் மனை பட்டா வழங்கி சாதனை
ADDED : பிப் 15, 2024 11:37 PM

மூங்கில்துறைப்பட்டு அடுத்த ரங்கப்பனுார் ஊராட்சி தலைவர் அர்ச்சனா காமராஜன் வீட்டு மனைப் பட்டா வழங்கி சாதனை படைத்துள்ளார்.
இது குறித்து அவர், கூறியதாவது;
ரங்கப்பனுார் ஊராட்சியில் 10 ஆயிரம் பனை விதைகள், 20 ஆயிரம் மரக்கன்றுகளும் நடப்பட்டு பசுமை ஊராட்சியாக மாற்றப்பட்டுள்ளது. ஆதிதிராவிட மக்களின் 60 ஆண்டு கோரிக்கையான வீட்டுமனை பட்டா 140 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
குடிநீர் பிரச்னையை தீர்க்க ஏரியில் கிணறு வெட்டி, அவற்றிலிருந்து குடிநீர் குழாய் இணைக்கப்பட்டு, வீடுதோறும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நலனுக்காக தானியக்களம் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடத் தெரு, குளத்து மேட்டு தெரு உட்பட பல தெருக்களில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. ஊராட்சி அலுவலகத்திற்கு முன், பேவர் பிளாக் போடப்பட்டுள்ளது. சரஸ்வதி பள்ளி அருகில் பெரியகுளம் வெட்டப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
காலனியில் விநாயகர் கோவில் அருகில் பேவர் பிளாக் போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூறும் பிரச்னைகளை உடனுக்குடன் சரி செய்து வருகின்றனர்.
அனைத்து வீதிகளிலும் மின் விளக்குகளை தினமும் பராமரித்து, இரவில் தடையின்றி மின் விளக்குகள் எரிகின்றன. பல தனியார் நிறுவனங்கள் சிறந்த ஊராட்சிக்கான விருதுகளை ரங்கப்பனுார் ஊராட்சிக்கு வழங்கியுள்ளன.
இவ்வாறு அவர், கூறினார்.