ADDED : ஏப் 28, 2025 04:02 AM

மனஅழுத்தம் விலகும்
அரசு பள்ளி மாணவர்கள் பலர் நீட் தேர்வுக்கு தயராகி வருகின்றனர். அவர்களுக்கு பெரிதும் உதவும் வகையில் இந்த மாதிரித்தேர்வு உள்ளது. இந்த தேர்வு மூலம் மாணவர்களுக்கு தைரியம் ஏற்படுவதுடன், மனஅழுத்தம் விலகும். மாதிரி தேர்வு போல இல்லாமல் உண்மையான நீட் தேர்வு போன்று நடத்தப்பட்டுள்ளது. இதனால், அடுத்த வாரம் நடக்க உள்ள நீட் தேர்வை, மாணவர்கள் பயமின்றி எதிர்கொள்வர்.
அப்சனா, மணலுார்பேட்டை
சந்தேகங்களுக்கு தீர்வு
மாணவர்களுக்கு மருத்துவபடிப்பு என்பது பெரும் கனவு. அதை நனவாக்க முயலும், பெற்றோருக்கு இது போன்ற மாதிரித்தேர்வு பயனுள்ளதாக உள்ளது.
நீட் தேர்வை முதன்முறையாக எழுதும் மாணவர்களுக்கு, தேர்வு குறித்து பல்வேறு சந்தேகங்கள் இருக்கும். தேர்வு முகமையின் விதிமுறைகள் முழுவதுமாக பின்பற்றி நடத்தப்பட்ட இந்த மாதிரித்தேர்வு சந்தேகங்களை தீர்க்கும் வகையில் இருந்தது.
சின்னபொண்ணு, தியாகதுருகம்
நல்ல அனுபவம்
திருச்சி மாவட்டம், லால்குடியை சேர்ந்த எனது உறவினர் மகன் மருத்துவராக வேண்டும் என்ற ஆசையில், நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறார். சில தினங்களுக்கு முன் கள்ளக்குறிச்சியில் மாதிரி தேர்வு நடக்க உள்ளதாக, தகவல் கிடைத்தது. வெளி மாவட்டமாக இருந்தாலும் பரவாயில்லை, அனுபவம் தான் முக்கியம் என்ற நோக்கில் முன்கூட்டியே பதிவு செய்து அழைத்து வந்தேன். அனைத்து விதிமுறைகளும் முறையாக பின்பற்றி தேர்வு நடத்தப்பட்டது. இதனால், மாணவர்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும்.
ஷாஜகான், லால்குடி,

