ADDED : செப் 16, 2025 11:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்; சித்தப்பட்டினத்தில் தி.மு.க., நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
ரிஷிவந்தியம் சித்தப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் வேலு தலைமை தாங்கினார். வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., சட்டசபை தொகுதி பொறுப்பாளர் பெருநற்கிள்ளி முன்னிலை வகித்தனர். அண்ணாதுரையின் பிறந்தநாளையொட்டி அவரது உருவபடத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராக போராடுவேன், தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பாரதிதாசன், பெருமாள், துரைமுருகன், ராஜேந்திரன், அசோக்குமார், மணலுார்பேட்டை நகர செயலாளர் ஜெய்கணேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.