/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அண்ணாமலையார் கோவில் தல வரலாற்று நுால் வெளியீடு
/
அண்ணாமலையார் கோவில் தல வரலாற்று நுால் வெளியீடு
ADDED : ஜன 16, 2025 04:28 AM

கள்ளக்குறிச்சி : தென்கீரனுார் உண்ணாமலை அம்மன் உடனாகிய அண்ணாமலையார் கோவிலில் தல வரலாற்று நுால் வெளியீட்டு விழா மற்றும் தல விருட்சம் நடு விழா நடந்தது.
ஊராட்சி தலைவர் வெண்ணிலா ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமை தாங்கினார். சான்றோர் பேரவை தலைவர் ஆசுகவி ஆராவமுதன் இறைவணக்கம் பாடி துவக்கினார். பேராசிரியர் குலசேகரபாண்டியன் வரவேற்றார். கவிஞர் மணிவாசகன் வாழ்த்துரை வழங்கினார். கோவிலின் தல வரலாற்று நுாலை அரங்கன் வள்ளியம்மை கவிதாலய அறக்கட்டளை தலைவர் ஜெயபாலன் வெளியிட்டார். முதல் பிரதியை கல்லை தமிழ் சங்க துணை தலைவர் கோமுகி மணியன் பெற்றுக்கொண்டார். ஆலயத்தின் துதிப்பாடல் நுாலை கல்லை தமிழ் சங்க செயலாளர் மதிவாணன் வெளியிட்டார். சைவ சித்தாந்த பேரவை நெறியாளர் சிவனடிமை செல்வம் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து கோவிலின் தல விருட்சம் நடப்பட்டது. நுாலாசிரியர் விஸ்வநாதன் கதிர்வேல்பிள்ளை நன்றி கூறினார்.

