/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுாரில் வணிக வளாகம் புதிய பஸ் ஸ்டேண்ட் கட்ட அறிவிப்பு தி.மு.க.,வினர் இனிப்பு வழங்கல்

ADDED : மார் 27, 2025 04:41 AM

திருக்கோவிலுார்: சட்டசபையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானிய கோரிக்கையில் திருக்கோவிலுாருக்கு புதிய பஸ் ஸ்டேண்ட், வணிக வளாகம் அமைக்கும் அறிவிப்பை வரவேற்று தி.மு.க., வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்.
சட்டப்பேரவையில் நேற்று நடந்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானிய கோரிக்கையின் போது, திருக்கோவிலுாரில் சந்தை புதுப்பிக்கும் திட்டத்தில், பழுதடைந்த காந்தி திருமண மண்டபத்தில் வணிக வளாகம் கட்டுவது, புதிய பஸ் ஸ்டாண்ட் அமைப்பது குறித்த அறிவிப்பை அமைச்சர் நேரு அறிவித்தார்.
திருக்கோவிலுார் நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.
நகரின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பாக இருக்கும் இதனை வரவேற்கும் விதமாக, நகராட்சி சேர்மன் முருகன் தலைமையில், தி.மு.க., வினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
அப்பொழுது தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் பொன்முடி, நேரு, மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணிக்கு நன்றி தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி குழு துணை சேர்மன் தங்கம், நகர செயலாளர் கோபிகிருஷ்ணன், நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.