/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை பாதுகாக்க அறிவிப்பு
/
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை பாதுகாக்க அறிவிப்பு
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை பாதுகாக்க அறிவிப்பு
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை பாதுகாக்க அறிவிப்பு
ADDED : டிச 03, 2024 06:48 AM
கள்ளக்குறிச்சி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல் மற்றும் உளுந்து பயிர்களை பாதுகாக்க வேளாண் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது சம்பா நெல் மற்றும் உளுந்து பயிர்கள் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவை தற்போது பெய்துவரும் புயல் மழையினால் அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
நெல் வயலில் தண்ணீர் தேங்கினால், நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் குறைந்துவிடும். எனவே வயலில் தேங்கியுள்ள கூடுதல் நீரை உடன் வெளியேற்ற வேண்டும். மழைநீர் வடியும் போது அதனுடன் மண்ணில் உள்ள தழை, மணி, சாம்பல் சத்து போன்ற சத்துகள் நீரில் அதிக அளவு கலந்து தண்ணீரோடு வெளியேறிவிடும்.
இதனால் பயிரின் தோகைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வெள்ளத்தால் கரைந்து போன வயலில் அதே வயதுடைய நெற்பயிரை நட்டு பயிரின் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும்.
வெள்ள நீர் வடிந்த பிறகு பயிரின் வளர்ச்சியை மேம்படுத்த ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம் மற்றும் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து ஒரு நாள் இரவு வைத்திருந்து மறுநாள் 17 கிலோ பொட்டாஷ் கலந்து வயலில் சீராக இட வேண்டும்.
அதேபோல் உளுந்து பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வயலில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற வேண்டும். உடன் சாலிசிலிக் அமிலம் 100 பிபிஎம் ஒரு லிட்., தண்ணீரில் 1 கிராம் என்றளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
இதுபோன்ற வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் விவசாயிகள் வெள்ளப்பாதிப்பிலிருந்து நெல் மற்றும் உளுந்து பயிர்களை பாதுகாத்திடலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.