/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி
/
மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூலை 27, 2025 11:09 PM

திருக்கோவிலுார்: பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை என்ற கோஷத்துடன் மணம்பூண்டி ஊராட்சியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
ஊராட்சி தலைவர் தயாளன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., கள் ஸ்ரீதர், பாலச்சந்திரன், ஒன்றிய குழு துணை சேர்மன் மணிவண்ணன் முன்னிலை வகித்தனர்.
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை சேர்மன் தனலட்சுமி உமேஸ்வரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் பங்கேற்றவர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி, முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.
ஊராட்சித் துணைத் தலைவர் ப ரமேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் மணிகண்டன் நன்றி கூறினார்.

