/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கலெக்டர், எஸ்.பி., அலுவலகத்தில் ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு
/
கலெக்டர், எஸ்.பி., அலுவலகத்தில் ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு
கலெக்டர், எஸ்.பி., அலுவலகத்தில் ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு
கலெக்டர், எஸ்.பி., அலுவலகத்தில் ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு
ADDED : அக் 28, 2025 05:48 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் மற்றும் எஸ்.பி., அலுவலகத்தில் ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
தமிழக அரசு சார்பில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் ஒவ்வொரு ஆண்டும் அக்., 27ம் தேதி முதல் நவ., 2ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா தலைமையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அனைத்து அரசு அலுவலர்கள் ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்றனர். இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி, சமூக பாதுகாப்பு திட்ட சப் கலெக்டர் சுமதி உட்பட பலர் பங்கேற்றனர். அதேபோல் கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.பி., மாதவன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏ.டி.எஸ்.பி.,க்கள் சரவணன், திருமால், டி.எஸ்.பி.,க்கள் ஜெயசந்திரன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சக்தி உட்பட காவல் துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் பலர் பங்கேற்றனர்.