/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
/
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : செப் 23, 2025 07:37 AM

சின்னசேலம் : சின்னசேலம் அரிமா சங்கம் மற்றும் கைலாஷ் மகளிர் கல்லுாரி சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
சின்னசேலம் ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அரிமா சங்க தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ரமேஷ், இணை செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் ஸ்ரீதரன், முன்னாள் தலைவர்கள் பழனிசாமி, சத்திய நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ஏழுமலை விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். தொடர்ந்து போதை பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பாதாகைகளை கையில் ஏந்தியபடி, கல்லுாரி மாணவிகள் நகரின் முக்கிய சாலைகள் வழியாக பேரணியாக சென்றனர். அரிமா சங்க நிர்வாகிகள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.