/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீட்டில் பதுக்கி வைத்திருந்த பழங்கால பொருட்கள் பறிமுதல்
/
வீட்டில் பதுக்கி வைத்திருந்த பழங்கால பொருட்கள் பறிமுதல்
வீட்டில் பதுக்கி வைத்திருந்த பழங்கால பொருட்கள் பறிமுதல்
வீட்டில் பதுக்கி வைத்திருந்த பழங்கால பொருட்கள் பறிமுதல்
ADDED : நவ 02, 2025 11:32 PM

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த பழங்கால பொருட்களை போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள வளையம்பட்டு கிராமத்தில் பழங்கால பொருட்கள் பதுக்கி வைத்துள்ளதாக சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தாசில்தார் வைரக்கண்ணன் உடன் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
அப்பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் பிரபாகரன், 40; என்பவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கிணறு தோண்டியபோது கிடைத்ததாக சங்கு, கிண்டி, குங்குமச்சிமிழ், அரபு காபி பானை உள்ளிட்ட பழங்கால பொருட்களை சாக்கு மூட்டையில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
பொருட்களை பறிமுதல் செய்து போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்ற போலீசார் வளையாம்பட்டு வி.ஏ.ஓ., நிமிலன் கொடுத்த புகாரின் பேரில் பிரபாகரன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
நான்கு ஆண்டுகளாக பழங்கால பொருட்களை வீட்டில் சாக்கு மூட்டையில் பதுக்கி வைத்திருந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

