/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
/
கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : டிச 13, 2025 06:28 AM
கள்ளக்குறிச்சி: 'கபீர் புரஸ்கார்' விருது பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;
ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான 'கபீர் புரஸ்கார்' விருது தமிழக முதல்வரால் வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் வசிக்கும் இந்திய குடிமக்கள் அனைவரும் இவ்விருதினை பெற தகுதி யுடையவர்.
கலவரம் மற்றும் வன்முறையின் போது பொதுமக்கள் மற்றும் அவர்களது உடமைகளை காப்பாற்றும் நபர்களின் உடல் மற்றும் மனவலிமையை பாராட்டி, 3 பேருக்கு காசோலையுடன் இவ் விருது வழங்கப்படும்.
இவ்விருதுக்கான விண்ணப்பத்தை https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை டிச., 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக்குழுவினர் விண்ணப்பங்களை பரிசீலினை செய்து, தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்வர்.
இது தொடர்பான கூடுதல் விபரங்களை கள்ளக்குறிச்சி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரின் 74017 03474 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

