/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புதிய குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
/
புதிய குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : அக் 26, 2024 07:44 AM
கச்சிராயபாளையம் : வடக்கனந்தல் பேரூராட் சியில் புதிய குடிநீர் இணைப்பு பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித் செய்திக்குறிப்பு:
வடக்கனந்தல் பேரூராட்சியில் அக்கராயபாளையம் முதல் அம்மாபேட்டை வரை 18 வார்டுகள் உள்ளன.
பேரூராட்சிக்குட்பட்ட பொது மக்கள் புதிதாக குடிநீர் இணைப்பு வேண்டு வோர் தங்களின் சொத்து வரி ரசீதுயுடன் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தால் 15 தினங்களுக்குள் புதிய குடி நீர் இணைப்பு வழங்கப்படும்.
பேரூராட்சி அனுமதியின்றி அத்து மீறி குடி நீர் இணைப்பு வைத்திருப்பது கண்டறியப்பட்டால் அபராத தொகையுடன் குடி நீர் கட்டணமும் வசூலிக்கப்படும். மேலும் குடி நீர் இணைப்புகளில் சட்ட விரோதமாக மின் மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பது கள ஆய்வின் போது கண்டறியப்பட்டால் மின் மோட்டார் பறிமுதல் செய்வதுடன அபராதமும் விதிக்கப்படும்.
பொதுமக்கள் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியினை வரும் 30ம் தேதிக்குள் செலுத்தி அபராத தொகையை தவிர்த்து கொள்வதுடன், 2.5 சதவீதம் ஊக்க தொகையும் வழங்கப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.