/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கிராமங்களுக்கு மினி பஸ் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
/
கிராமங்களுக்கு மினி பஸ் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
கிராமங்களுக்கு மினி பஸ் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
கிராமங்களுக்கு மினி பஸ் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : பிப் 03, 2025 10:46 PM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மினி பஸ்கள் இயக்க புதிய வழித்தடங்கள் குறித்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 'மினி' பஸ்கள் இயக்க புதிய வழித்தட வரைபடங்களுடன் கூடிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அதிக குடும்பங்களை கொண்ட கிராமங்கள், குக்கிராமங்கள், குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் சாலை போக்குவரத்து சேவை துவங்கப்பட உள்ளது. இத்திட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது.
மேலும் தமிழகத்தில் மினி பஸ்களுக்கான கட்டண திருத்தம் வரும் மே 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
பழைய மினி பஸ் திட்டத்தின் கீழ் ஏற்கனவே அனுமதி பெற்ற உரிமையாளர்கள் புதிய திட்டத்தில் சேர்வதற்கான விருப்பத்தினை எழுத்துப்பூர்வமாக அளித்து அனுமதி சீட்டினை ஒப்படைக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய வழித்தட வரைபடங்களுடன் கூடிய விண்ணப்பங்களை பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், தனியார் அமைப்புகள் மற்றும் பஸ் உரிமையாளர்கள் அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலரிடம் சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.