/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தொழில்முறை சார்ந்த வல்லுநர் பதிவுக்கு விண்ணப்பம் வரவேற்பு
/
தொழில்முறை சார்ந்த வல்லுநர் பதிவுக்கு விண்ணப்பம் வரவேற்பு
தொழில்முறை சார்ந்த வல்லுநர் பதிவுக்கு விண்ணப்பம் வரவேற்பு
தொழில்முறை சார்ந்த வல்லுநர் பதிவுக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : நவ 01, 2024 11:16 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தொழில்முறை சார்ந்த வல்லுநர்களை பதிவு செய்திட தகுதி வாய்ந்த பட்டதாரிகள் விண்ணப்பம் அளிக்கலாம்.
கலெக்டர் பிரசாந்த் செய்திகுறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ஒருங்கிணைந்த கட்டட வரைபட அனுமதி மற்றும் மனைப்பிரிவு அங்கீகாரம் அனைத்தும் முழுமையாக இணையவழி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இணையவழி அனுமதி வழங்கும் பொருட்டு பதிவு பெற்ற கட்டட வடிவமைப்பாளர்கள், பொறியாளர்கள், கட்டமைப்பு பொறியாளர்கள், கட்டட அபிவிருத்தியாளர்கள், தர தணிக்கையாளர்கள், நகரமைப்பு வல்லுநர், அபிவிருத்தியாளர்கள் (டெவலப்பர்ஸ்) ஆகியோர்களுக்கு பதிவு செய்ய மற்றும் கட்டட வரைப்படங்களில் கையொப்பமிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
இவை மாவட்டத்தில் 9 வட்டாரங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் அனுமதி அளிக்கும் பொருட்டு தொழிற்சார் வல்லுநர்களின் பெயர்களை மாவட்ட அளவில் உள்ள ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
தொடர்ந்து, பதிவு செய்த நபர்களின் விபரங்களை சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சி அமைப்புகளுக்கு அனுப்பி தெரிவிக்க வேண்டும். பதிவு பெற்ற தொழில்முறை வல்லுநர்கள் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் 5,000 ரூபாய் பதிவு கட்டணம் செலுத்தி ஆணை பெற்று பணிகளை மேற்கொள்ளலாம்.
இது தொடர்பான பதிவேட்டினை வட்டார வளர்ச்சி அலுவலர் பராமரிக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள 9 வட்டாரங்கள் வாரியாக பதிவு செய்திட தகுதி வாய்ந்த பி.இ., (சிவில்) மற்றும் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் பட்டதாரிகள் விண்ணப்பம் அளிக்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

