sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சொட்டு நீர் பாசனம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

/

சொட்டு நீர் பாசனம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

சொட்டு நீர் பாசனம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

சொட்டு நீர் பாசனம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : மே 06, 2025 12:07 AM

Google News

ADDED : மே 06, 2025 12:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம், ; ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் முருகன் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

சொட்டு நீர் பாசனம் பயன்படுத்துவதன் மூலம் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தலாம். மேலும், பயிர்களுக்கு தேவையான உரத்தை, வேர் வழியாக அனுப்பபடுகிறது.

நடப்பாண்டில் ரிஷிவந்தியம் வட்டாரத்திற்கு சொட்டு பாசன திட்டத்திற்கு 220 எக்டர் பரப்பளவிற்கு பொருள் இலக்கும், 230 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகள் 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகள் 75 சதவீத மானியத்திலும் சொட்டுநீர் பாசனம் அமைத்து பயன்பெறலாம்.

ஒரு எக்டர் பரப்பளவில், சொட்டு நீர் பாசனம் அமைக்க 1 லட்சத்து 35 ஆயிரத்து 855 ரூபாயும், தெளிப்பு நீர் கருவி வாங்க 25 ஆயிரத்து 131 ரூபாயும், மழை துாவான் கருவி வாங்க 39 ஆயிரத்து 396 ரூபாயும் மானியமாக வழங்கப்படுகிறது.

சொட்டு நீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் சிட்டா அடங்கல், ஆதார் மற்றும் குடும்ப அட்டை நகல், சிறு, குறு விவசாய சான்று, நில வரைப்படம், 2 புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். அல்லது உதவி தோட்டக்கலை துறை அலுவலர்கள் ராஜேஷ் 98843 29859, வேலன் 99426 25775, சீனிவாசன் 90035 53639, நித்யா 89409 31513 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us