/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மணிமேகலை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
/
மணிமேகலை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஏப் 14, 2025 06:35 AM
கள்ளக்குறிச்சி : மாவட்டத்தில் மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்க கலெக்டர் பிரசாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் வட்டாரம், ஊராட்சி மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், சுய உதவி குழுக்களுக்கு மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது.
இந்த கூட்டமைப்புகள், முறையான கூட்டம் நடத்தி இருக்க வேண்டும். சேமிப்பதை முறையாக பயன்படுத்தி, வங்கிக்கடன் பெற்றிருக்க வேண்டும்.
குழு உறுப்பினர்களின் பொருளாதாரம் மேம்பாடு அடைந்து இருத்தல் வேண்டும்.
உறுப்பினர்கள் திறன் வளர்ப்பு மற்றும் வாழ்வாதார பயிற்சி பெற்றிருப்பதுடன், சமூக நல செயல்பாடுகளில் பங்கேற்று இருக்க வேண்டும்.
இவற்றின் அடிப்படையில் தகுதிவாய்ந்த கூட்டமைப்புகள் தேர்வு செய்யப்படும். தகுதிவாய்ந்த கூட்டமைப்புகள் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

