ADDED : ஜூலை 29, 2025 08:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை மனவளக்கலை மன்ற அறக்கட்டளைக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
உலக சமுதாய சேவா சங்கத்தின் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அறக்கட்டளை தலைவராக ஆதிஅண்ணாமலை, செயலாளராக மோகன், பொருளாளராக கார்த்திகேயராஜ், 6 துணைத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர். அறக்கட்டளை இணை இயக்குனர் அருள்ஜோதி, விழுப்புரம் மண்டல செயலாளர் வேல்முருகன் நியமனம் செய்து வாழ்த்தினர். நிர்வாகிகள் வெங்கட்ராமன், ராவணன், சுமதி, வாசுகி, மதுரைமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.