/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பள்ளி தலைமை ஆசிரியைக்கு பாராட்டு விழா
/
அரசு பள்ளி தலைமை ஆசிரியைக்கு பாராட்டு விழா
ADDED : டிச 01, 2024 05:11 AM

கள்ளக்குறிச்சி: தமிழக அரசின் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்ட வெட்டிபெருமாளகரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியைக்கு பாராட்டு விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வெட்டிப்பெருமாளகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நடப்பு கல்வி ஆண்டிற்கான சிறந்த பள்ளியாக தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டது.
பள்ளிக் கல்வித்துறையின் சுழற்கேடயத்தை பள்ளியின் தலைமையாசிரியை மலர்க்கொடியிடம் அமைச்சர் மகேஷ் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு சார்பில் தலைமை ஆசிரியைக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் தென்னரசி பாண்டியன் தலைமை தாங்கினார்.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜான்சிராணி, துணைத்தலைவர் அருள்ஜோதி, உறுப்பினர் மணி முன்னிலை வகித்தனர். உறுப்பினர் கவிதைத்தம்பி வரவேற்றார்.
தமைமை ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் பள்ளி மேலாண்மை குழு சார்பாக சால்வை அணிவித்து பாராட்டுரை வழங்கப்பட்டது.