/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இந்திலி ஆர்.கே.எஸ்., பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
/
இந்திலி ஆர்.கே.எஸ்., பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : ஜன 20, 2025 04:14 AM
கள்ளக்குறிச்சி : இந்திலி ஆர்.கே.எஸ்., மாஸ்டர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் மகுடமுடி தலைமை தாங்கினார். செயலாளர் கோவிந்தராஜு முன்னிலை வகித்தார்.
பள்ளி முதல்வர் தனலட்சுமி வரவேற்றார். நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில், வனத்துறை சார்பில் நடந்த உயிரின வார விழாவில் வன பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு வகையான மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி துணை முதல்வர் ஜுசஸ் சுஜி நன்றி கூறினார்.