/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஓவிய போட்டியில் முதலிடம் பள்ளி மாணவருக்கு பாராட்டு
/
ஓவிய போட்டியில் முதலிடம் பள்ளி மாணவருக்கு பாராட்டு
ஓவிய போட்டியில் முதலிடம் பள்ளி மாணவருக்கு பாராட்டு
ஓவிய போட்டியில் முதலிடம் பள்ளி மாணவருக்கு பாராட்டு
ADDED : அக் 13, 2024 08:02 AM

கள்ளக்குறிச்சி : மாவட்ட அளவிலான ஓவிய போட்டியில் முதலிடம் பிடித்த சிறுவங்கூர் அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு கலை பண்பாட்டு துறை மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் 6 வயது முதல் 16 வயது வரையிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கு குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் உள்ளிட்ட கலை போட்டிகள் நடந்தன.
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர். சிறுவங்கூர் அரசு நடுநிலைப் பள்ளியின் 8ம் வகுப்பு மாணவர் அஸ்வின், ஓவியப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார்.
அவரை, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜோதிமணி சான்றிதழ் வழங்கி பாராட்டி வாழ்த்தினார். தலைமையாசிரியை சுகுணா மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.