/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் பாராட்டு விழா
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் பாராட்டு விழா
ADDED : பிப் 09, 2024 06:54 AM

கள்ளக்குறிச்சி: ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் சிறந்த புத்தகம் எழுதியதற்காக விருது பெற்ற கல்வி நிறுவனங்களின் தலைவருக்கு பாராட்டு விழா நடந்தது.
ஆர்.கே.எஸ்., கல்வி நிறுவனங்களின் தலைவர் மகுடமுடி எழுதிய 'இதம் தரும் இதயம்' என்ற புத்தகத்திற்கு, எஸ்.ஆர்.எம்., நிகர்நிலை பல்கலைகழக தமிழ் பேராய அமைப்பு சார்பில், டாக்டர் அப்துல்கலாம் அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் என்ற விருதையும், பொற்கிழியையும் வழங்கி கவுரவித்தது. மேலும், புத்தகத்தை பதிப்பித்த மகுடம் பதிப்பகத்தின் உரிமையாளர் நளினி கவுரவிக்கப்பட்டார்.
இதற்காக இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த பாராட்டு விழாவிற்கு, கல்வி நிறுவனங்களின் பொருளாளர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் கோவிந்தராஜூ முன்னிலை வகித்தார். மாணவி சுபலட்சுமி வரவேற்றார். துணைத்தலைவர் திருஞானசம்பந்தம் வாழ்த்திப் பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளர் நேரு பேசினார்.
விழாவில், மகுடமுடிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.கல்லுாரி முதல்வர் மோகனசுந்தரம் உட்பட பேராசிரியர்கள் பங்கேற்றனர். மாணவி ஐஸ்வர்யா நன்றி கூறினார்.

