sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு பெற்று தரப்படும்: கலெக்டர் பழனி உறுதி

/

விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு பெற்று தரப்படும்: கலெக்டர் பழனி உறுதி

விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு பெற்று தரப்படும்: கலெக்டர் பழனி உறுதி

விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு பெற்று தரப்படும்: கலெக்டர் பழனி உறுதி


ADDED : டிச 27, 2024 07:09 AM

Google News

ADDED : டிச 27, 2024 07:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அணைக்கட்டு உடைப்பை பார்வையிட்ட கலெக்டர் பழனி, பாதிக்கப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என கூறினார்.

பெஞ்சல் புயல் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில், திருக்கோவிலுார் அணைக்கட்டின் இடது புறக்கரை உடைந்து விவசாய நிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டது.

நேற்று விழுப்புரம் கலெக்டர் பழனி பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து கூறியதாவது.

வெள்ளத்தால் அணைக்கட்டின் இடது புறம், பம்பை வாய்க்கால் மற்றும் அருமலை ஏறி வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை தற்காலிகமாக சரி செய்யும் வகையில் மணல் மற்றும் கற்களைக் கொண்டு நீர் வெளியேறாத வண்ணம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக 30 ஏக்கர் அளவிலான விவசாய நிலங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டது. இதனை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் விவசாய நிலங்களில் உள்ள தரை கிணறு, ஆழ்துளை கிணறுகள் மற்றும் மின்மோட்டார்கள் போன்றவைகள் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளதால், இதற்கான நிவாரண உதவிகளும் பெற்று தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏமப்பேர் செல்லும் சாலை முழுவதுமாக சேதம் அடைந்துள்ளதால் அதனையும் சரி செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இவ்வாறு கலெக்டர் பழனி தெரிவித்தார்.

ஆய்வின்போது நீர்வளத்துறை செயற்பொறியாளர் சோபனா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் சுமதி, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ஐயப்பன், வேளாண் பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர் நாராயணலிங்கம், பி.டி.ஓ., ஜெகநாதன், சண்முகம்சுந்தரம், தாசில்தார் கிருஷ்ண தாஸ் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us