/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரகண்டநல்லூர் மார்க்கெட் கமிட்டியில் ரூ. 8.5 கோடி வர்த்தகம்
/
அரகண்டநல்லூர் மார்க்கெட் கமிட்டியில் ரூ. 8.5 கோடி வர்த்தகம்
அரகண்டநல்லூர் மார்க்கெட் கமிட்டியில் ரூ. 8.5 கோடி வர்த்தகம்
அரகண்டநல்லூர் மார்க்கெட் கமிட்டியில் ரூ. 8.5 கோடி வர்த்தகம்
ADDED : பிப் 01, 2024 06:21 AM
திருக்கோவிலுார்; அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் இரண்டு நாட்களில் ரூ.8.5 கோடிக்கு வர்த்தகமானது.
திருக்கோவிலுார் சுற்றுவட்டார பகுதிகளில் நெல், உளுந்து மற்றும் மக்காச்சோளம் உள்ளிட்ட விவசாய விளைபொருட்களின் அறுவடை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டிக்கு விளை பொருட்களின் வரத்து பன்மடங்கு அதிகரித்துள்ளது.
ஒரே நேரத்தில் அனைத்து விளை பொருட்களையும் ஏலத்திற்கு அனுமதித்தால் விலை குறைவதுடன், நிர்வாக சிக்கல்கள் எழும் என்ற காரணத்தால், நெல்லுக்கு 250 லாட்டும், உளுந்துக்கு 400 லாட் மட்டுமே வழங்கப்படுகிறது. இதற்கு மேற்கொண்ட விளை பொருட்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மறுநாள் லாட் வினியோகிக்கப்படுகிறது.
இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களில் 5 ஆயிரம் மூட்டை உளுந்து, 15 ஆயிரம் முட்டை நெல் ஏலத்திற்கு அனுமதிக்கப்பட்டது. மக்காச்சோளம் உள்ளிட்ட விளைபொருட்களின் வரத்தும் கணிசமாக இருந்ததன் காரணத்தால் இரண்டு நாட்களில் மட்டும் 1927 மெட்ரிக் டன் விவசாய விளை பொருட்கள் ஏலத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் ரூ.8.5 கோடி வர்த்தகமானது.
வரும் நாட்களிலும் நெல் மற்றும் உளுந்தின் வரத்து தொடரும் என்ற காரணத்தால், விவசாயிகள் ஏலத்தில் பங்கு எடுப்பதற்கான லாட் கட்டுப்பாடு தொடரும் என கமிட்டி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.