/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரகண்டநல்லுார் கமிட்டியில் ரூ.2.30 கோடி வர்த்தகம்
/
அரகண்டநல்லுார் கமிட்டியில் ரூ.2.30 கோடி வர்த்தகம்
ADDED : மே 19, 2025 11:43 PM
திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டிக்கு எள் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நேற்றைய வர்த்தகம் 2.30 கோடி ரூபாயாக இருந்தது.
அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டி ஆண்டு முழுதும் விளை பொருட்கள் ஏலத்திற்கு வரும் கமிட்டியாகும்.
நெல், கம்பு, வேர்க்கடலை, எள், மக்காச்சோளம் மட்டுமல்லாது கேழ்வரகு, உளுந்து, பச்சை பயறு என பயறு வகை விளை பொருட்களும் ஏலத்திற்கு வரும்.
நேற்று எள் 1500 மூட்டைகள், 2 நெல் 2,900, கம்பு 100, மக்காச்சோளம் 1400 மூட்டைகள் என 497 மெட்ரிக் டன் விளை பொருட்கள் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் 2.30 கோடி ரூபாய்க்கு வர்த்தகமானது.
எள் வரத்து அதிகரித்திருந்தாலும், அதன் விலையில் வீழ்ச்சி ஏற்படவில்லை.
நேற்றைய சராசரி விலையாக ஒரு மூட்டை எள் 9719 ரூபாய்க்கு விற்பனையானது. வரும் நாட்களிலும் எள் வரத்து அதிகரிக்கும் என்கின்றனர் விவசாயிகள்.